பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா சட்டப் பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார். இந்நிலையில், மஜத., எம்.எல்.ஏ.,க்கள் பலரும் காங்கிரஸுடனான கூட்டணியை விரும்பவில்லை என்று தெரிகிறது. இதை அடுத்து, குமாரசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர் எம்.எல்.ஏக்கள்.
முன்னதாக, ஹைதராபாத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களில் சிலர், தாமாகவே அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலின் லேண்ட்லைன் எண்ணில் இருந்து பாஜக.,வினரை தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை ஹிந்தி ஊடகம் ஒன்று உறுதிப் படுத்தி செய்தியாக வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், குமாரசாமியின் நடவடிக்கை பிடிக்காமல், பின்னாளில் 3ல் 2 பங்கு எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று திரண்டு குமாரசாமியை வெளியேற்ற திட்டமிட்டு தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரசாமி, எங்களால் ஆட்சி அமைப்பது உறுதியாகத் தெரியாவிட்டால், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றுக் கொண்டு தங்கள் போக்கில் போவதை என்னால் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.