புது தில்லி: ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மதிக்கிறது. அதேநேரம், அத்துமீறித் தாக்குதல் நடத்தப்படும்போது உரிய முறையில் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது என்றார்.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஊக்கமளிக்கும் வகையில் செயல்படும் நிலையில், பயங்கரவாதச் செயல்களும், பேச்சுவார்த்தையும் ஒரேநேரத்தில் நடைபெற முடியாது என்று கூறிய நிர்மலா சீதாராமன், ராணுவத்திற்கு வெடிபொருட்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றார்.
ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூறுவது குறித்து பதிலளித்த அவர், இது அடிப்படை ஆதாரமற்ற வெற்றுக் குற்றச்சாட்டு என உறுதிபடக் கூறினார்.