ரஃபேல் விமான கொள்முதலில் ஊழலா? என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்!

Published:

nirmala - 2026

புது தில்லி: ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மதிக்கிறது. அதேநேரம், அத்துமீறித் தாக்குதல் நடத்தப்படும்போது உரிய முறையில் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது என்றார்.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஊக்கமளிக்கும் வகையில் செயல்படும் நிலையில், பயங்கரவாதச் செயல்களும், பேச்சுவார்த்தையும் ஒரேநேரத்தில் நடைபெற முடியாது என்று கூறிய நிர்மலா சீதாராமன்,  ராணுவத்திற்கு வெடிபொருட்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றார்.

ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூறுவது குறித்து பதிலளித்த அவர், இது அடிப்படை ஆதாரமற்ற வெற்றுக் குற்றச்சாட்டு என உறுதிபடக் கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img