அட… இந்தச் சின்னப் பொண்ணு என்னாமா வாழ்த்துது! ஆங்கிலஇசை கேட்டு உருகிப் போன தமிழிசை!

Published:

tamilisai soundarrajan - 2026

தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதவி என்பதால், தமிழ்சை மட்டுமல்ல, அரசியல் கட்சியினரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதனை தனது பேட்டியில் குறிப்பிட்ட தமிழிசை, எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதவி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி என்றார்.

தமிழிசையை எத்தனையோ பேர் வாழ்த்தி தகவல் கொடுத்தாலும், சிலர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து பாராட்டினாலும், நேரில் வந்து வாழ்த்து சொன்ன ஒரு சிறுமியின் ஆங்கில இசைக் குரல் தமிழிசையை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

இந்தச் சிறுமியின் வாழ்த்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள தமிழிசை, வாழ்த்துகளால் நெகிழ வைத்த சிறுமி ஆயுஷிக்கு எனது வாழ்த்துக்கள்! என்று கூறியுள்ளார்.

அந்த சிறுமி ஆயுஷி தனது வாழ்த்தில், கடுமையான போராட்டத்துக்கும், உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்துள்ள வெற்றியின் பரிசுதான் இந்தப் பதவி; அவருக்கு நம் வாழ்த்து என்று கூறியுள்ளார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img