வார்னர், ஸ்மித் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை; ஐபிஎல்.லிலும் எதிரொலித்தது

சற்றுமுன் விளையாட்டு

smith australia - 2026

பந்து சேதப் படுத்தல் விவகாரத்தில் வார்னர், ஸ்மித் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே தென்னாப்பிரிகாவின் கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோரின் பதவிகள் உடனடியாகப் பறிக்கப்பட்டன. தொடர்ந்து இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு இன்று திருப்பி அனுப்பப் பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஐபிஎல்.,- இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐதராபாத் அணி கேப்டன் பதவியில் இருந்தும் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் கிரிக்கெட் விளையாட ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது இந்தியன் ப்ரீமியர் லீக்கிலும் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.