நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் கடும் குளிரை தாங்க முடியாமல் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 1300 பக்தர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழையும் கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது.
பலத்த மழை காரணமாக நேபாளத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். யாத்திரை சென்ற பக்தர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 19 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பலத்த மழையோடு கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. கடுமையான குளிரை தாங்க முடியாமல் 4 பக்தர்கள் பலியாகியுள்ளனர். அவர்கள் நான்கு பேரும் கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கடுமையான குளிரில் சிக்கி தவிக்கும் தங்களை மீட்குமாறு பக்தர்கள் தங்களின் உறவினர்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கைலாஷ் யாத்திரைக்காக சென்று மோசமான வானிலை காரணமாக விமான சேவை இல்லாமல் நேபாளத்தின் சிமிகோட்டில் சிக்கி தவிக்கும் சென்னையை சேர்ந்த 19 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்படுவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.