red sandalwood - 2026ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தப் பட்டதாகக் கூறி, செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

தமிழக எல்லையை ஒட்டிய காளகஸ்தி அருகே ஏர்பேடு வனப் பகுதியில் ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், வனத்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது  செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை சுற்றி வளைத்த போலீசார், அவர்களை கைது செய்ய முயன்றனராம். அப்போது அவர்கள் போலீசார் மீது கற்களை வீசித் தாக்கினராம். இதையடுத்து போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து மற்ற அனைவரும் தப்பியோடி விட்டதாகவும், கடத்த தயாராக இருந்த செம்மரங்களை பறிமுதல் செய்ததாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending