மகாரஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர், மாட்டு சாணியால் காரை முழுவதும் மொழுகி பயணம் மேற்கொள்கிறார். இது குறித்த அந்த இளம்பெண்ணின் ஆச்சரியபட வைக்கும் அசத்தலான பதில்கள்.
கோடை காலங்களில் ஏற்படும் வெயில் தாக்கங்கலிருந்து தப்பிக்க ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றிய வித விதமான ஐடியாக்கள் மூலம் தங்களை பாதுகாத்துக் கொண்டு வருகிறனா்.
அதிலும் குறிப்பாக இருசக்கரம் மற்றும் காரில் பயணம் செய்வோர் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல பைக் பயணத்தில் சீட்டுகள் அடுப்புகட்டிகளா மாறிவிடுகிறது.
ஏசி இல்லாத கார் பயணம் என்றால் வெளியிலிருந்து வரும் அனல் காற்று, வியா்வை மழையில் நம்மை நனைத்திட வைக்கும் இது நாம் அன்றாடம் மேற்கொள்ளும் பயணங்களில் தொடர் கதையாகவே இருந்து வருகிறது..
ஆயிரம் ஆயிரம் விஞ்ஞான வளா்ச்சி மூலம் பல்வேறு கருவிகளான மின் விசிறி, ஏர்கூலர் ஏசி, போன்ற கருவிகள் மூலமாகவும் வெயில் தாக்கத்திலிருந்து தப்பி வந்தாலும் நமது முன்னோர்கள் காட்டிய இயற்கையான வழிகளுக்கு முன்னால் விஞ்ஞான கருவிகள் தோற்று போகிறது என்றால் அது மிகையில்லை அப்படி ஒரு சம்பவம்தான் மகாராஷ்ரா மாநில இளம்பெண்ணின் கார் பயணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.
ஷேஜல் தன்னுடைய கார் முழுவதும் மாட்டு சாணத்தால் மொழுகியுள்ளார். மாட்டு சாணத்தால் காரின் மேற்பரப்பை மூடும்போது காரின் உள்ளே வரும் வெப்ப காற்று கனிசமாக தடுக்கப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
மேலும் காரில் பயணம் செய்யும்போது அனல் காற்ற நம் மீது வீசாது. மேலும் காரின் உள்ளே இருக்கும் இருக்கைகள் சூடேறாமல் தடுக்கின்றது. இருக்கிறது. என கூறியுள்ளார்.
நம் முன்னோர்கள் இந்த கோடை வெப்பத்தின் தாக்கிலிருந்து தற்காத்து கொள்வதற்காகவே வீட்டு வாசலில் மாட்டுச் சாணத்தை கரைத்து தெளிப்பதும், வீடுகளே சாணத்தால் மொழுகப்பட்டு கட்டப்பட்டிருந்ததற்கும் காரணம் என்ன என்பது இப்போது நமக்கு புரிந்திருக்கும்.