இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் ஆட்சி செய்த காங்கிரஸ், ஜே.டி.எஸ் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் குமாரசாமி அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பின் முடிவில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி. கர்நாடக சட்டப்பேரவையில், பா.ஜ.கவுக்கு ஆதரவாக 105 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். இந்தநிலையில், பா.ஜ.க ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் முரளிதர ராவ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பா இன்று ஆளுநரிடம் உரிமை கோருகிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.