atha sarma 2 - 2026

நடிகை அதா சர்மா தன்னுடைய ட்விட்டரில் மணமகன் தேவை என விளம்பரம் செய்துள்ளார். அதில் பல கண்டிசன்களைப் இடம்பெற்றிருக்கிறது.

தமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்திருக்கும் அதா சர்மா தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதா சர்மா.

atha sarma - 2026

அதா சர்மா மும்பையில் வசிக்கும் தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அதா சர்மாவின் பிரத்யேக பொழுதுபோக்கு ட்விட்டர் ஆகும். ட்விட்டரில் தற்போது அவருடைய ட்விட்டரில் மாப்பிள்ளைத் தேவை என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.

atha sarma 1 e1569237526552 - 2026

சிரித்த முகத்துடன் மூன்று வேளை சமைக்க வேண்டும். வெங்காயம் சேர்க்கக் கூடாது. வழக்கமாக ஷேவ் செய்ய வேண்டும். இந்திய பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வீட்டிலும் வெளியிலும் மது அருந்தக் கூடாது என்று நிபந்தனைகளைப் போட்டுள்ளார் அதா சர்மா.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending