கரூர் மாவட்டத்தில்… உலக சுற்றுச்சூழல் தினம்!

Published:

environment day karur
environment day karur

உலக சுற்றுச்சூழல் தினம்-2020: கரூர் எம்.ஆர்.வி.டிரஸ்ட் வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்தும் உலக சுற்றுச்சூழல் தின விழா காணியாளம்பட்டி பல்வகை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவரும்,சமூக ஆர்வலருமான இல.மணிகண்டன் அவர்கள் தலைமையில் காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவர் திருமதி.எஸ்.கெளரி அவர்களும், நாட்டு நல பணி திட்ட அலுவலர் பி.குணசேகரன் அவர்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

karur environmental
karur environmental

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிலவேம்பு சூரணம், முககவசம்,மரக்கன்றுகள் வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

சமூக விலகலை கடைபிடித்து நடைபெற்ற இவ்விழாவில் வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் அ.ஐய்யப்பன்,.வே.சிவசக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்!

Related articles

Recent articles

spot_img