சென்னை: தமிழ்நாட்டில் கோயம்பத்தூர், காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் மத்திய அரசு இந்திரதனுஷ் இயக்கம் – 201 கீழ் தேர்வு செய்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதை இடையில் நிறுத்திய அல்லது தடுப்பூசியே போடாத குழந்தைகளை அதிக அளவில் கொண்டுள்ள 28 மாநிலங்களின் 201 மாவட்டங்கள் முதல் கட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் முதல் கட்டமாக மார்ச் 2015 முதல் ஜூன் 2015 வரை நான்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளும் கர்பிணி பெண்களும் இதன் கீழ் பயன் அடைவர். முதன்மை சுகாதார செயலரின் தலைமையின் கீழ் நோய் தடுப்பிற்கான மாநில செயல்படை மாவட்டங்களில் இந்த இயக்கத்தின் வளர்ச்சியை கண்காணித்து உதவும். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் முதன்மை சுகாதார செயலர் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கானொலி காட்சி மூலம் இது குறித்து விளக்குவர். இதன் பிறகு வருங்கால முகாமிற்கான தயார் நிலைக் குறித்து மறு ஆய்வு கானொலி காட்சி நடைப்பெறும். மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் நோய் தடுப்பிற்கான மாவட்ட செயல்படை வட்டங்கள் / நகர்ப்புற பகுதிகளில் இந்த இயக்கத்தின் வளர்ச்சியை கண்காணித்து, உதவும். தலைமை சுகாதார அலுவலர் தலைமையில் அனைத்து வட்டார சுகாதார அலுவலர்கள் திட்டமிடுதல் மற்றும் அறிக்கை செயல்பாடு குறித்த மாவட்ட அளவிலான தயார் நிலைக் கூட்டம் நடைபெறும். வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையின் கீழ் நோய் தடுப்பிற்கான வட்டார செயல்படை வட்டாரங்களில் இந்த இயக்கத்தின் வளர்ச்சியை கண்காணித்து உதவும். அங்கன்வாடி, ஆஷா சகோதரிகள் போன்ற சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 2014ல் இந்தியாவின் நோய் தடுப்பு சதவீதம் 65 சதவீதமாக இருந்தது. இதனை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 90 சதவீதமாக மாற்றுவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். தடுப்பூசி போட்டுக் கொள்வதை இடையில் நிறுத்திய அல்லது தடுப்பூசியே போடாத குழந்தைகள், குழந்தைப் பருவ நோய், ஊனம், மரணம் வரும் தருவாயில் உள்ள குழந்தைகள் ஆகியோர் இந்திராதனுஷ் இயக்கத்தின் சிறப்பு நோய் தடுப்பு முகாம்கள் மூலம் பயன்பெறுவர். தொண்டை தொற்று நோய், கக்குவான் இருமல், டெட்டனஸ், காசநோய், போலியோ, அம்மை, மஞ்சள்காமாலை ஆகிய ஏழு உயிர் கொல்லி நோய்களுக்கு இந்திரதனுஷ் இயக்கத்தின் கீழ் தடுப்பூசி போடப்படும். கூடுதலாக, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், இமோபிளஸ் இன்புளுன்சா பி நோய்களுக்கு நாட்டின் தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்கள் / மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்படும். கர்பிணி பெண்களுக்கு டெட்டனஸ்கான தடுப்பூசியும் போடப்படும்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் இந்த்ரதனுஷ் இயக்கத்தின் கீழ் தேர்வு
சென்னை: தமிழ்நாட்டில் கோயம்பத்தூர், காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் மத்திய அரசு இந்திரதனுஷ் இயக்கம் – 201 கீழ் தேர்வு செய்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதை இடையில் நிறுத்திய அல்லது தடுப்பூசியே போடாத குழந்தைகளை அதிக அளவில் கொண்டுள்ள 28 மாநிலங்களின் 201 மாவட்டங்கள் முதல் கட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் முதல் கட்டமாக மார்ச் 2015 முதல் ஜூன் 2015 வரை நான்கு சிறப்பு தடுப்பூசி…
1–2 minutes



Leave a Reply