சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தத்துக்கான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை வெள்ளிக்கிழமை இன்று நடைபெறுகிறது. போக்குவரத்து ஊழியர் 12-ஆவது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 11-ஆம் தேதி 42 தொழிற்சங்கத்தினரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மார்ச் 2-ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையும், 12-ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டன. இந்த இரண்டு பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிந்தது. நிதி தொடர்பான பிற கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்கு இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
போக்குவரத்துத் தொழிலாளர் 3ம் கட்ட பேச்சுவார்த்தை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari