*இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம்
வாசிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை வாசித்தார்.
அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்ததை பாராட்டி 2வது தீர்மானம்
வாசிக்கப்பட்டது.
தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட பொதுக்குழுவில் தீர்மானம்
வாசிக்கப்பட்டது.
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்புகளில் தொடர்வார்கள் என
பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிவரும் தமிழக அரசுக்கு
பாராட்டு அளிக்கப்பட்டது.
டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட கட்சி பொறுப்புகள் செல்லாது என்றும்
தீர்மானம் வாசிக்கப்பட்டது.
முன்னதாக ஜெயலலிதா ஏற்படுத்திய ஆட்சியை கலைக்க நினைப்பவர்கள், அவரை என்ன
பாடுபடுத்தி இருப்பார்கள்
2வது முறையாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இல்லாத பொதுக்குழுவை நடத்தி
கொண்டிருக்கிறோம்
பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு
கட்சியை மீட்பார்கள் – என்று வளர்மதி பேசினார்.