forest
forest

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள சொரகொளத்தூர் செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை எதிரே காப்புக்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்துள்ளார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

vankodumai 1 - 2026

கொலை செய்யப்படுவதற்கு முன்பாக பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட மர்மநபர் காமவெறியால் பெண்ணின் உடல் பாகங்களை பல்லால் கடித்துள்ளார். அதற்கான அடையாளங்கள் பெண்ணின் உடலில் பல இடத்தில் இருந்தன.

மேலும் பிணம் கிடந்த இடத்தில் பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மேலாடை டாப்ஸ் ஆகியவை கிடந்தன. அதை, போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கொலை சம்பந்தமாக 2 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending