susaid
susaid

அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி கிராமத்தில் சிவக்குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் நிஷாந்த்(16) 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கொரோனா காலத்தில் இருந்து செல்போன் அதிகளவில் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிஷாந்த் அப்பகுதியில் உள்ள கடைஒன்றில் தனது செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் அங்கேயே காத்திருந்த மாணவன் சிறிதுநேரம் கழித்து பார்த்தபோது செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் செல்போன் கிடைக்காததால் மனமுடைந்து பெற்றோர் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் நிஷாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் நிஷாந்த் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அலசல் சத்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் ஓடிவந்து நிஷாந்தி காப்பாற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் செல்லும் வழியிலேயே நிஷாந்த் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் காணாமல் போனதால் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending