vankodumai - 2026

ஆவடியை அடுத்த திருநின்றவூதில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடியை அடுத்த திருநின்றவூர், நத்தம்பேடு, கம்பர் தெருவை சேர்ந்தவர் நரேந்திரன் (23). இவர், ஆட்டோ டிரைவர். நரேந்திரன் திருநின்றவூர், சுதேசி நகரை சேர்ந்த 16வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.

மேலும், அவர் அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். பின்னர், அவர் சிறுமியை பல முறை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

narendran - 2026

இந்த விவரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதன்பிறகு, சிறுமியை பலாத்காரம் செய்த நரேந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending