காதலிக்கு ஐபோன் வாங்க செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலன்!

Published:

nainar - 2026

தன் காதலிக்கு ஐபோன் வங்கி தருவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ரோச் காலனியை சேர்ந்த ஆஷா என்ற பெண் கடந்த பிப்ரவரி மாதம் சாலையில் செல்லும் போது பைக்கில் வந்த மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த 17 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வழிப்பறிக்கு கேடிஎம் பைக்கின் புதிய மாடலை திருடன் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையில் அதே நபர் தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோடு பகுதியில் வந்த நின்றிருந்த போலீசாரைக் கண்டு பயந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

இதனை கண்ட போலீசார் அவர்களின் திருட்டு முழியை வைத்து, அவர்களை மடக்கி விசாரித்ததில், தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த நயினார் என தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் ஆஷாவின் செயினை பறித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

மேலும் விசாரணையில் தனது காதலிக்கு ஐபோனை பரிசளிக்க இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img