திருமண ஆசைகாட்டி முதலாளியின் 16 வயது மகளைக் கடத்திய டிரைவர்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
car 1 - 2026

ஈரோட்டில் 11ம் வகுப்பு மாணவியை கடத்தி, கட்டாய திருமணம் செய்த கார் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்த முகமது சபிக் மகன் இப்ராகிம் (24). கார் டிரைவர். இவர், ஈரோட்டை சேர்ந்த ஒருவர் வீட்டில் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்தார்.

அப்போது, கார் உரிமையாளரின் மகளுடன் நட்பாக பழகி உள்ளார். அந்த சிறுமி 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பழக்கத்தின் மூலம் சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் 23ம் தேதி இப்ராகிம் அந்த சிறுமியை கடத்தி சென்றார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் சிறுமியையும், கடத்தி சென்ற இப்ராகிமையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், ஈரோடு டவுன் பகுதியில் இப்ராகிம், அந்த சிறுமி இருவரும் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தௌலத்நிஷா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இருவரையும் மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் போலீசார் இப்ராகிம் மீது கடத்தல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.