ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே 19 வயது இளம்பெண்ணை காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசையில் உள்ள தனியார் மீன் கம்பெனியில் 19 வயது பெண் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, அந்த நிறுவனத்தில் உடன் பணிபுரியும் 25 வயது இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில், அந்த இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், அதனை செல்போனில் படம் பிடித்து உள்ளார்.

இந்த நிலையில், அந்த பெண்ணிடம் தனது நண்பர்கள் 6 பேருடன் உறவில் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார்

இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டி நண்பர்களின் இச்சைக்கு இணங்க செய்துள்ளார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இந்த சூழலில், அந்த பெண் கர்ப்பமடையவே, தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயாரிடம் தெரிவித்து உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் தாயார், உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். முதற்கட்ட விசாரணையில் கூட்டு பாலியல் வன்கொடுமை என்பது தெரிய வந்ததால், இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending