ajith 2 - 2026

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து வினோத்-அஜித் கூட்டணி மீண்டும் வலிமை படத்திற்காக இணைந்தது.

இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். இப்பட்ட்டத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் காலா பட நடிகை ஹுமா குரேஷி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இப்படதிக்ரு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “நாங்க வேற மாறி” மற்றும் “மதர் சாங்” என வெளியான 2 பாடல்களுமே ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில், வலிமை மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். இப்படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டன்ட் காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. ஆனால், தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக வலிமை உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending