நெல்லை மாவட்டம் தென்காசியில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்கள் தென்காசி புதிய பேரூந்து நிலையம் முன்பு ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழக அரசு 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்திரவு ஊதிய உயர்வு வழங்கி உள்ளது. அதனை முழுமையாக, முறையாக தொழிலாளர்களுக்கு வழங்கபடாததை கண்டித்தும், ஊதியத்தில் கையாடல் என 108 நிர்வாகத்தின் பராபட்டமான தொழிலார்களின் விரோத போக்கை கைவிடக்கோரியும், 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் வாகன பராமரிப்பு என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் (GVK – EMRI) மீது நீதி விசாரணை  நடத்திட வேண்டும் என்று கோசங்கள் எழுப்பினர்
மேலும் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்குமிடம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், வாகன பராமாரிப்பு, முறையான ஊதியம், போன்றவற்றை வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் என்றும், அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை நோக்கி பேரணி, வேலை நிறுத்தம் என போராட்டங்களை தொடரப் போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending