சென்னை: தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் மார்ச் 30 இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அவை…
தீர்மானம் : 1 எழுச்சியும் – உணர்ச்சியும் மிக்க ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு
கழகச் செயல் தலைவருக்கும் – மாநாட்டு பொறுப்பாளர்களுக்கும் பாராட்டு: திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சி மாநாடாக மட்டுமின்றி, இலட்சோப இலட்சம் இலட்சியத் தொண்டர்களின் இணையிலா உணர்ச்சி மாநாடாகவும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில், 2018 மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சீரும் சிறப்புமாக மண்டல மாநாட்டை நடத்தி சாதனை புரிந்த கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இச்செயற்குழு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் சு.முத்துச்சாமி மற்றும் வரவேற்புக்குழு, நிதிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் பணியாற்றிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக முன்னணியினர் அனைவருக்கும் இச்செயற்குழு மனமார்ந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தள்ளாத வயதிலும் வாலிபப் பெரியாராக மாநாட்டில் கம்பீரமான சிறப்புரையாற்றி கழகத் தொண்டர்களுக்கு திராவிட இயக்கத்தின் அருமை பெருமைகளை எடுத்து விளக்கிய கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கும்; இம்மண்டல மாநாட்டில் கொள்கை அடிப்படையிலான ஆக்கபூர்வமான பல்வேறு தலைப்புகளில் பேசிய கழக முன்னோடிகளுக்கும் சொற்பொழிவாளர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிக்கிறது.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில், கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பியுள்ள ‘ஐம்பெரும் முழக்க’ங்களை முனைப்புடன் முன்னெடுத்துச் சென்று, தமிழகத்தைப் பீடித்துள்ள அ.தி.மு.க.வின் அலங்கோல ஆட்சியெனும் கொடு நோயை அகற்றிட கழகத் தோழர்கள் அனைவரும் முழுமூச்சுடன் மக்களை சந்திக்கும் மகத்தான பணியில் தினந்தோறும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
தீர்மானம் : 2 நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தமிழக அரசே மேல்முறையீடு செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பையும், பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களையும் உதாசீனப்படுத்தி விட்டு, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்திட அனுமதி அளித்திருக்கும் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் சர்வாதிகார மனப்பான்மைக்கு இச்செயற்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
இத்திட்டம் பற்றி மக்களிடம் கருத்து எதுவும் கேட்காமல், சுற்றுப்புறச் சூழல் சட்டங்களுக்கு எதிராக, மக்களின் வாழ்வாதாரத்தையும், நிலத்தடி நீர் ஆதாரத்தையும், குடிநீரையும் பாதிக்கும் வகையிலும், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய – அறவே பாதுகாப்பு இல்லாத ஒரு திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அவசரமாக அனுமதி அளித்திருப்பதும், அத்திட்டத்திற்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து விவசாயிகளுக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்படும் தண்ணீரை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியிருப்பதும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் செயல்படும் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் ஈவுஇரக்கமற்ற போக்கை காட்டுகிறது. இங்கிருக்கும் ஆளும் அ.தி.மு.க. அரசோ தமிழ்நாட்டு நலனை தன் காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு, மாநில நலனுக்கு எதிரான திட்டங்களில்கூட மத்திய அரசிடம் வாதிடாமல், வாய்மூடி மவுனியாக இருக்கிறது.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் 1,500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு, தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்பது மாநில அரசின் கையில் இருக்கும் மிக முக்கியமான துருப்புச் சீட்டாகவே இந்த செயற்குழு கருதுகிறது.
மத்திய சுற்றுச்சூழல் குழு அளித்துள்ள அனுமதியில், “மலையைத் தகர்க்கும் பணிகளில் ஆபத்து ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்”, என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையே இத்திட்டம் எவ்வளவு பேரிடரை மக்களுக்கு ஏற்படுத்தும் திட்டம் என்பதை “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என வெளிப்படுத்துகிறது. இத்திட்டம் மக்களுக்கும், மலைகளில் வாழும் உயிரினங்கள், அபூர்வமான தாவரங்கள் அனைத்திற்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை மத்திய சுற்றுச்சூழல் குழு உணர்ந்த காரணத்தால்தான் “மலையை தகர்க்கும் போது ஆபத்துக்கள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது. இதனை மாநில அரசு மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் திட்டம்தான் நியூட்ரினோ திட்டம் என்பதை மத்திய அரசு உணர்ந்திருப்பது, அவர்கள் வழங்கியுள்ள அனுமதிக் கடிதத்திலிருந்தே தெரிய வருகிறது. அவ்வாறு மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் வேட்டு வைக்கும், நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, மத்திய பாஜக அரசு நியூட்ரினோ திட்டத்துக்கு அளித்திருக்கின்ற சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து, தமிழக அரசே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும்; தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்க வேண்டிய அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ஆளும் அ.தி.மு.க. அரசை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 3 ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்துக!
பாதுகாப்பு, சுற்றுச்சூழல், குடிநீர்த் தேவை என்ற அனைத்து நிலையிலும் மக்களுக்குக் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலை ஏற்கனவே பல வருடங்களாக பொது மக்களின் தீவிர போராட்டத்திற்கு இலக்காகியிருக்கிறது. இந்த ஆலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தடையில்லா சான்றிதழ் கோரி 1.8.1994 அன்று விண்ணப்பித்து, அதன் அடிப்படையில் 17.5.1995 அன்று தமிழக அரசும், 22.5.1995 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் அனுமதி அளித்தது. இந்த ஆலையால் தூத்துக்குடி மாவட்டத்தில் வாழும் மக்கள் புற்றுநோய் போன்ற பல்வேறு கொடிய நோய்களுக்கு உள்ளாகி ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தினம்தோறும் வரும் செய்திகளை இச்செயற்குழு மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு நிவாரணமாகவும் குறிப்பாக சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் மண் வளத்தை பாதுகாக்க 2.4.2013 அன்றே 100 கோடி ரூபாய் வங்கி வைப்பு நிதியாக வைத்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்ட அந்த 100 கோடி ரூபாய்க்கு வட்டியே 35 கோடி ரூபாய் கிடைத்து விட்டது என்று தமிழக மாசுக் கட்டுப்பாடுத் துறை அமைச்சரே பதிலளித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2013ஆம் ஆண்டிலிருந்து அந்த வட்டித் தொகையிலிருந்து மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இதுவரை செய்யத் தவறியது ஏன்? என்ற மிக முக்கியமான கேள்வி எழுகிறது.
மக்களின் பாதுகாப்பிற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் வைப்பு நிதியாக உள்ள 135 கோடி ரூபாயை முற்றிலும் பயன்படுத்தாமல், மக்களுக்கு பேராபத்தையும் – சுகாதாரச் சீர்கேட்டையும் உருவாக்கியிருப்பதற்கு இச்செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
எனவே, தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்ற நிலையில்; மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அச்சத்தையும், ஆபத்தையும் ஏற்படுத்துவதை. மத்திய – மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 4 நேர்மையற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்க!
கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் கடந்த ஐந்தாண்டுகளில் படுபாதாளத்திற்குப் போய் விட்டது. கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் நியமனத்தில் துவங்கி அனைத்துப் பதவிகளிலும் “லஞ்சம்” தலைவிரித்தாடியது. அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் சீரழிந்து சிதறிக் கிடக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.கவால் கூட்டுறவு சங்கங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீரழிவை தடுத்து நிறுத்தி, சமூக – பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றும் கூட்டுறவுப் பேரியக்கத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த முறை போலின்றி, இம்முறை கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக்கழகம் பங்கேற்றுள்ளது.
ஆனால், 2.4.2018 முதல் நடைபெறும் கூட்டுறவு சங்கத் தேர்தலில், உள்ளாட்சித் தேர்தல்களிலும் – இடைத் தேர்தல்களிலும் அராஜகம் செய்து செயற்கை வெற்றி பெற்றதைப் போல, கூட்டுறவு சங்கத் தேர்தல்களிலும் ஆளும் அ.தி.மு.க.வினர் தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெறும் உள்நோக்கத்துடன், தி.மு.க.வினரின் வேட்பு மனுக்களை நிராகரிப்பது; பெற்றுக் கொள்ளும் வேட்புமனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க மறுப்பது; வெற்றி பெற்றவர்கள் என்று அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை தன்னிச்சையாக ஒட்டி விட்டு, தேர்தல் அதிகாரிகள் தலைமறைவாகி விடுவது போன்ற கீழ்த்தரமான மோசடிகளில் கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரிகளே ஈடுபடுவதற்கு இச்செயற்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அ.தி.மு.க.விற்கு ஆதரவாகச் செயல்படும் தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடும் அதிமுகவினருக்கும் மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையமும், தமிழ்நாடு காவல்துறை தலைவரும் துணை நின்று, நியாயமற்ற மற்றும் நேர்மையற்ற முறையில் ஒரு கூட்டுறவு சங்கத் தேர்தலை ஜனநாயகத்திற்கு புறம்பாக நடத்திக் கொண்டிருப்பதை இந்த செயற்குழு வேதனையுடன் பதிவு செய்கிறது.
எனவே, கூட்டுறவு தேர்தல் ஆணையமே, சுதந்திரமான – நேர்மையான தேர்தல் நடத்துவதை விட்டுவிட்டு, ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக முறையற்று செயல்படுவது, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்று இச்செயற்குழு கருதுவதால், தற்போது நடைபெறுகின்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து விட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படி சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் கூட்டுறவு தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்திட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 5 மருத்துவ கல்லூரி மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு கண்டனம்.
மருத்துவக் கல்லூரி மேல்படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத இடங்களை மாநிலங்களிடமிருந்து எடுத்துக் கொண்டாலும், அதில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்காமல் வஞ்சித்து, சமூக நீதியை குழி தோண்டிப் புதைத்து வரும் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசுக்கு இச்செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்த அநீதியை மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருப்பது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞர்கள் மத்தியில் தீப்பிழம்பாக சுழன்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 8,000 இடங்களில் 2,100 இடங்கள் பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்றாலும், மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் இடஒதுக்கீட்டு அநீதியால், 165 இடங்கள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மேல்படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பிற்படுத்தப்பட்டோரின் நலனை சூறையாடுவதில் குறியாக இருப்பது பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் கொந்தளிக்க வைக்கிறது. நாடு முழுவதுமான ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 550 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ மேல் படிப்பில் இடம் கிடைத்திருக்க வேண்டிய நிலையில், சென்ற ஆண்டு மத்திய தொகுப்புக்கு தமிழ்நாட்டிலிருந்து அளிக்கப்பட்ட 700 இடங்களில் ஒரு இடம்கூட தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வில்லை என்பது தாங்கிக் கொள்ள முடியாத சமூக அநீதி மட்டுமல்ல – இன்றைய பா.ஜ.க. அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.
எனவே, மத்திய தொகுப்பில் எடுத்துக் கொள்ளும் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திட வேண்டுமென்று, மத்தியில் உள்ள மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு; மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டுமென்றும் இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 6 காவிரிப் பிரச்சினையில் நடுவர்மன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத மத்திய- மாநில அரசுகளுக்குக் கண்டனம்!
2014 நாடாளுமன்றத் தேர்தலில் “வளர்ச்சி” “ஊழல் ஒழிப்பு” “கருப்புப் பணமீட்பு” என்ற பொய்யான உறுதிமொழிகளை முன்வைத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளைப் பெற்ற பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான “பன்முகத் தன்மைக்கும்” “ஜனநாயகத்திற்கும்” “மதச்சார்பற்ற தன்மைக்கும்” “கூட்டுறவு கூட்டாட்சிக்கும்” விரோதமான செயல்களில் ஈடுபட்டு நாட்டைப் பிளவுபடுத்தும் மதவாதப் பாதையில் அழைத்துச் சென்று தங்கள் “ஆட்சியின் தோல்வியை” மறைத்து 2019 நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு, விபரீத விளையாட்டுகளையும், மீண்டும் கவர்ச்சிகரமான பொய்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. நாட்டை மத ரீதியாகவும் – மொழிவெறி அடிப்படையிலும் பிரித்தாள முனைப்புடன் செயல்படும் பா.ஜ.க.விற்கும், அதன் ஆதரவோடு இயங்கி வரும் இந்துத்துவா சங்பரிவார அமைப்புகளுக்கும் இச்செயற்குழுக் கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
காவிரி, தமிழக மக்களின் உயிரோடு இரண்டறக் கலந்துவிட்ட நதிநீர்ப் பிரச்சினை மட்டுமல்ல – திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியிலும் – எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து முன்னெடுத்துச் சென்று, சாதனைகள் பலவற்றை நிகழ்த்திய பிரச்சினை என்பதை முதலில் இச்செயற்குழு பதிவு செய்திட விரும்புகிறது.
தமிழகம், கர்நாடகம், கேரளம்,புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்குள் நதிநீர்ப் பகிர்வு செய்து கொள்ளும் இந்தப் பிரச்சினையில், முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட முறை, தலைவர் கலைஞர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் கர்நாடக மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். பேச்சு வார்த்தையில் தீர்வு காண்பதற்கு அனுமதிக்காமல் கர்நாடக மாநிலம் தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைபிடித்ததால், இப்பிரச்சினையை சட்டப்பூர்வமாக அணுக வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போதுதான், 5.9.1969-ல் முதல் குரல் எழுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 17.2.1970-ல் கழக ஆட்சியில்தான், முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் முதன்முதலில் “காவிரி நடுவர் மன்றம்” அமைக்கக் கோரி 17.2.1970 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார். நடுவர் மன்றம் அமைக்கக் கோரி முதன் முதலில் 8.7.1971 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
கர்நாடக முதல்வர் உள்ளிட்ட அண்டை மாநில முதல்வர்களை அழைத்து, அப்போதைய மத்திய நீர் வளத்துறை அமைச்சரான மாண்புமிகு கே.எல்.ராவ் அவர்கள் கூட்டிய காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று, 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான ஆய்வினை மேற்கொண்டு, அந்த ஒப்பந்தம் என்றைக்கும் செல்லும் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
இதனையடுத்து, தலைக்காவிரி தொடங்கி கீழணை வரை உள்ள மொத்த நீரின் அளவு கணக்கிடப்பட வேண்டும் என்றும்; அதன் அடிப்படையில் தொடர்புடைய மாநிலத்திற்கு எவ்வளவு நீர் வழங்க முடியும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, காவிரி நீர் இருப்பை அளவிட, ‘காவிரி உண்மை கண்டறியும் குழு’ (Cauvery Fact Finding Committee) மத்திய அரசால் அமைக்கப்பட்டது.
1989ல் மீண்டும் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில், மத்தியில் சமூகநீதிக் காவலர் திரு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஏற்று, காவிரி நடுவர் மன்றம் 2.6.1990-ல் உருவாக்கப்பட்டது. அப்படி அமைந்த நடுவர் மன்றத்திற்கு இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் வரை சென்று பெற்றுக் கொடுத்து, இடைக்காலத் தீர்ப்பையும் பெற்றது தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு.
அதனையடுத்து, காவிரி நதிநீர் ஆணையம் அமைத்து, 192 டி.எம்.சி. காவிரி நீர் தமிழகத்திற்கு வழங்கும் இறுதி தீர்ப்பினை 5.2.2007 அன்று பெற்றதும் தலைவர் கலைஞர் அரசுதான். இச்சூழ்நிலையில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு மீதான மேல் முறையீட்டில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு கடந்த 16.2.2018 அன்று வெளிவந்தது. ஏற்கனவே கழக அரசு அமர்த்திய காவிரிப் பிரச்சினையில் சான்றாண்மையும் நீண்ட அனுபவமும் மிக்க மூத்த வழக்கறிஞரான திரு.பராசரன் போன்றவர்களை விலக்கி வைத்ததால், உச்ச நீதிமன்றத்தின் முன்பு நிலத்தடி நீர் குறித்து உரிய தகவல்களை உச்ச நீதிமன்றத்தின் முன்வைக்காமல், தமிழகத்திற்கு நடுவர் மன்றத்தால் வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. அளவிலிருந்து 14.75 டிஎம்சியைப் பறிகொடுத்து, தமிழகத்தின் பங்கு 177.25 டி.எம்.சி. மட்டுமே என்ற அளவில் குறைத்துப் பெறவேண்டிய அவலநிலையை ஏற்படுத்தி விட்டது ஆளும் அ.தி.மு.க. அரசு.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடனேயே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியும், அதிமுக அரசு அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. பிறகு தி.மு.க.வே அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விட்ட நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அரசும் அறிவித்தது. தமிழகத்தின் ஒற்றுமையை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தி.மு.கழகம் அறிவித்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ரத்து செய்து விட்டு, தமிழக அரசு கூட்டியிருந்த 22.2.2018 தேதிய கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்றது. அக்கூட்டத்தில் பேசும்போதே, “உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள “ஸ்கீம்” (Scheme) என்பது பற்றி அரசு கவனமாக இருக்க வேண்டும்” என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய காலத்தில் எச்சரித்ததை இச்செயற்குழு நினைவூட்டுகிறது.
ஆனால், அந்த முக்கியமான எச்சரிக்கையை அ.தி.மு.க அரசு அலட்சியம் செய்தது. அதனால் உச்சநீதிமன்றம் விதித்த ஆறுவாரக் கெடுவும் இன்றைக்கு முடிவடைந்த நிலையில், கர்நாடக மாநிலத் தேர்தல் எனும் குறுகிய அரசியல் இலாபத்திற்காக, மத்திய பாஜக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வேண்டுமென்றே தாமதம் செய்து காலம் கழித்துவிட்டு, கடைசியில் தீர்ப்பில் உள்ள “ஸ்கீம்” (Scheme) பற்றி விளக்கம் கேட்கப் போகிறோம் என்று முடிவெடுத்திருப்பது, “குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்து விட்டது” என்ற வஞ்சகத்தின் வெளிப்பாடாகவும் கபட நாடகமாகவும் அமைந்துள்ளது. ஆறு வார காலக் கெடுவிற்குள் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தீவிர அழுத்தம் கொடுக்க தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஆக்கபூர்வமான யோசனையையும் அ.தி.மு.க. அரசு எள்ளி நகையாடி, செயல் தலைவர் ஏற்படுத்திக் கொடுத்த அனைத்துக் கட்சி ஒற்றுமையைச் சிதைத்து விட்டு பதவிநாற்காலியே போதும் என்று ஒட்டிக் கொண்டிருக்கிறது. பாராளுமன்ற கூட்டத் தொடரில் “பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி” போன்றவற்றை மறைப்பதற்கு, ஊழலில் ஊறித் திளைக்கும் அ.தி.மு.க. தனது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, அவையை நடத்தவிடாமல், குழப்பம் விளைவித்து, பா.ஜ.க.வின் திரைமறைவு நாடகத்தில் ஒரு அங்கமாக செயல்பட்டு, தமிழகத்திற்கு கிடைத்த எஞ்சிய உரிமையையும் இழந்து நிற்கிறது ஆளும் அ.தி.மு.க. அரசு.
“ஆறுவார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” என்று 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு எவ்வித அழுத்தமும் கொடுக்காமல், கை பிசைந்து தடுமாறுகிறது அ.தி.மு.க. அரசு. தமிழகத்தின் உரிமைகளைக் காவு கொடுத்து தமிழர் நலனைக் காட்டிக் கொடுத்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கும், அடுத்தடுத்து தமிழகத்தை நேரடியாக வஞ்சித்துப் பச்சைத் துரோகம் செய்திருக்கும் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுக்கும் இச்செயற்குழு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 7 காவிரி – அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம்!
காவிரி பிரச்சினை, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் உயிர்நாடி பிரச்சினை என்பதால், இப்பிரச்சினையில் ஒரு ஆக்கபூர்வமான நிலைப்பாட்டை எடுப்பதற்கும் தமிழகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தி, நம் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் முன் வைத்தது. ஆனால் ஆளும் அ.தி.மு.க. அரசோ மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை வேண்டா வெறுப்பாகவே கூட்டியது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி இன்றுவரை பிரதமரை சந்திக்க அனைத்துக் கட்சி குழுவினரை அழைத்துச் செல்ல முடியவில்லை.
இதற்கிடையில், 2.3.2018 அன்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள், இப்பிரச்சினை குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தொலைபேசி மூலம் அழைத்தார். தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினை என்பதால், எதிர்க்கட்சித் தலைவரும் அதற்கிணங்கி, தமிழக முதல்வரை 3.3.2018 அன்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அவர்களுடன் சந்தித்தார்.
அப்பொழுது முதல்வர் “இப்பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்றும்; வேண்டுமானால், நீர்வளத் துறை அமைச்சரை சந்தியுங்கள்” என்று தகவல் வந்ததாக தெரிவித்தார். அதனை எதிர்க்கட்சித் தலைவரும் – கழக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல், இதுகுறித்து சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென தி.மு.க. சார்பில் வலியுறுத்தினார். இக்கோரிக்கையை ஏற்று, 8-3-2018 அன்று அச்சிறப்புக் கூட்டம் கூட்டலாம் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். எனினும், அந்த தேதியில் கூட்டம் நடத்த தமிழக அரசு முன்வரவில்லை.
பின்னர், 15.3.2018 தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் காவிரி பற்றி விவாதித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதனை பிரதமருக்கும் அனுப்பி வைத்தும், இன்று வரை சட்டமன்ற தீர்மானத்தின் மீதான நடவடிக்கை என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசும், தமிழ்நாடு சட