நீட் எதிர்ப்பு மசோதாவின் தற்போதைய நிலையை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நீட் குறித்து திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியபோது, நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதா மீது நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன? என்று கேட்டார்.
மேலும், நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து விட்டது, நீட் தேர்வை ரத்து செய்ய அரசு தவறிவிட்டது, மாநில கல்வி உரிமையை மதிக்காமல் சர்வாதிகார போக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார் ஸ்டாலின்.