இந்த அறிவுரை… பெண்ணுக்கு அல்ல… பெண்ணைப் பெற்றவர்களுக்கு!

பெண்ணின் பெற்றோருக்கு இப்படி எழுதுகிறேன் என்று கோபம் வேண்டாம். காலம் மாறிவிட்டது என்று சொன்னாலும் இன்னும் அப்படியேதான் இருக்கு.

முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் பட்டாலும் நஷ்டம் சேலைக்கு தான். நம் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது இனி பெண்ணின் வாழ்க்கை தான்.

அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தால் புகுந்தவீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்க பழக்கிவிடுங்கள். எந்த வீட்டில் மாமியார் நாத்தனார் பிடுங்கல் இல்லை . உங்கள் மனைவி இந்த நாத்தனார் மாமியார் கொடுமை இல்லாமல் இருந்தாரா?

நீங்கள் அம்மா கோண்டாக இருந்தீர்களா? அல்லது மனைவி பேச்சை கேட்டு அம்மாவை உதாசீன படுத்தினீர்களா? வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல மாமியார் நாத்தனார் பிரச்சனையெல்லாம் ஒரு ஐந்தாறு வருடத்தில் மாறிவிடும்.

உங்கள் பெண்ணை செல்லமாக வளர்த்துவிட்டீர்கள் சரி அவள் கோபித்து கொண்டு பிரிந்து வந்தால் அவள் வாழ்க்கை . அந்த பிள்ளையின் வாழ்க்கையும் கெடுகிறதே அவனுக்காவது வேறு கல்யாணம் நன்றாக நடந்துவிட கூடும் உங்கள் பெண்ணின் மறுமணம் நன்றாக அமையும் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

பெண்ணின் எதிர்காலம் முக்கியம் என நினைத்தால் விட்டுகொடுத்து செல்லுங்கள்.

  • ஜோதிடர் ரவி சாரங்கன்