நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சீக்கியர்களின் பொற்கோவிலில் உணவு உண்ணும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை நயன்தாரா, தென்னிந்திய திரை உலகிலும் பிரபலமாக விளங்கி வருகிறார்.
சினிமா வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் பலவற்ற்றைக் கடந்து வந்துள்ளார் நயன்தாரா. குறிப்பாக அடிக்கடி காதல் வலையில் விழுவார். பின்னர் அது சரிப்படவில்லை என்று நகர்வார்.
சினிமா நடிகைகள் காதலிப்பதும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் அவரவர் உரிமை என்றும் சாதாரண நிகழ்வு என்றும் ஆகிவிட்டாலும், நடிகை நயன்தாராவுக்கு மட்டும் இது தொடர்கதையாகிவிட்டது வருத்தத்துக்குரியது.
வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு, பிறகு ‘வில்லு’ படத்தில் நடித்தபோது அப் படத்தின் இயக்குநரான பிரபுதேவா என்று இருந்த நிலையில், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது.
இருவரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்ததாக கிசுகிசு வந்தது. தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பஞ்சாப் பொற்கோவிலில் வழிபட்டு, கோயிலில் நடைபெற்ற அன்னதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து உண்ணும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தி வெளியிட்டுள்ளார் நயன்தாரா.
Golden temple. At the Langer,food for everyone ?? #Amritsar pic.twitter.com/igcX4O3aeY
— Nayanthara✨ (@NayantharaU) September 16, 2018