மதுரை:

சினிமாக்கதையை மிஞ்சும் வகையில், நண்பர்களுடன் சேர்ந்து, தனது மாமியாரை மருமகனே சொத்துக்காக பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் மதுரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த ஜோதி என்பவரை சில தினங்களாகக் காணவில்லை என்று அவரது மகள் உள்ளிட்ட உறவினர்கள் போலீஸில் புகார் செய்தனர். இந்தப் புகாரைப் பதிவு செய்த போலீஸார், இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் விசாரித்தனர். அப்போது, ஜோதி தனது மகளை முடக்குச் சாலையைச் சேர்ந்த செல்வின் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தது தெரியவந்தது.  ஜோதியின் மருமகன் செல்வினிடம் விசாரித்த போது, அவர் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் போலீசார் ’உரிய’ முறையில் விசாரித்தனர் .

அப்போது மாமியார் ஜோதியை தனது நண்பர்களுடன் சேர்ந்து துன்புறுத்திக் கொன்றதாக, செல்வின் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து செல்வின், அவரது நண்பர்களான அழகரடி அருண் பொன்மேனி, முகமது ஷெரீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மாமியாரிடம், சொத்துத் தகராறு, வரதட்சணை கேட்டு தொந்தரவு என பல விதங்களில் மிரட்டி, அவரை அடித்து ஜோதியை அவரது மருமகன் செல்வின் தனது நண்பர்களுடன் சேர்ந்து  படுகொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை, புல்லூத்து பாய்ஸ் டவுன் பகுதியில் உள்ள காளாண் தோட்டத்தில் புதைத்துள்ளனர்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஜோதியின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending