தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தின் போதான வன்முறை சம்பவத்தில், தவிர்க்க முடியாத சூழலில்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளைக் கடந்து, இன்று வன்முறையாக மாறியது. வன்முறையாளர்கள் வாகனங்களை தீவைத்துக் கொளுத்தியதுடன், ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் பணியாளர்களின் வீடுகளையும் கொளுத்தினர். இதனால் வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்லையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர், எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு கோப்புகளை கொளுத்தி எல்லை மீறிப் போனதால் துப்பாக்கிச்சூடு சம்பவம் தவிர்க்க முடியாததாகி விட்டது என்று விளக்கம் அளித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதுதான் அரசின் நிலைப்பாடு. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறோம் என்று குறிப்பிட்டார் ஜெயக்குமார்.
மேலும், இந்த துரதிருஷ்டவசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விவாதம் நடைபெற்றது, இது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என அவர் கூறினார்.





சொடà¯à®Ÿ சொடà¯à®Ÿ தலையன௠ரொமà¯à®ª மூளைகà¯à®•ாரன௠மாதிரி பேசà¯à®µà®¾à®°à¯.. ஆனா உணà¯à®®à¯ˆà®¯à®¿à®²à¯ எலà¯à®²à®¾à®®à¯ களிமண௠!!
இவனை எலà¯à®²à®¾à®®à¯ நிகà¯à®• வசà¯à®šà¯ சà¯à®Ÿà®©à¯à®®à¯