தூத்துக்குடியிலிருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர், கோவில்பட்டி, நெல்லை செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.
மேலும் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தில் 17 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டதாக போக்குவரத்து கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி முழுவதும் இன்று கடையடைப்பு நடத்தப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவிக்கையில், துாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், ஒன்பது பேர் இறந்துள்ளனர்; நுாற்றுக்கணக்கானோர் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்றதோடு, துப்பாக்கி சூட்டை கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், இன்று, துாத்துக்குடி முழுவதும் கடையடைப்பு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி முழுவதும் இன்று கடையடைப்பு நடத்தப்படுகிறது. நடத்தப்படும் என்றார்.