November 10, 2024, 8:07 PM
28.8 C
Chennai

தனது பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

கரூர்: அதிமுக., கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் கண்ணியக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வரும் 9ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன போராட்டம் நடைபெறும்  என்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மாநில செயற்குழுக் கூட்டத்தில் ஜாக்டோ – ஜியோ முடிவு செய்யப் பட்டதாக, ஒருங்கிணைப்பாளர் சுபிரமனியன் செய்தியாளர்களிடம் கூறினார்.

கரூர் லட்சுமிபுரத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாநில செயற்க்குழு நடைபெற்றது. இதில் ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமனியன் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தங்கது துறையில் பணியாற்றுகின்ற ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்

வேலை நிறுத்தத்தின் முடிவில் துறை சார்ந்த செயலாளர்கள் அமைச்சர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது கூடிய விரைவில் தங்களது கோரிக்கைக்கான ஆணைகளை வழங்குவதாக தெரிவித்தார்கள் .

ALSO READ:  11ம் ஆண்டில் ‘மன் கி பாத்’: ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றி மக்களை எச்சரித்த பிரதமர் மோடி!

இந்தப் பேச்சுவார்த்தை முடிவுற்று சுமார் ஒரு மாத காலமாகியும் இதுவரையில் எவ்வித அரசு ஆணையும் வழங்கப்படவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் 12524 ஊராட்சி செயலர்களுக்கு அமைச்சர் மற்றும் செயலாளர்கள் அளித்த வாக்குறுதியின்படி பதிவு எழுத்தர்களுக்கான ஊதியதிற்கான அரசு ஆணை விரைவில் வெளிட வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசணை செய்யப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்களிலேயே தற்போது உள்ள தமிழக முதல்வர் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிக சம்பளம் அரசு கொடுக்கிறது அதை விடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று கண்ணியக்குறைவாக ஒருமையில் பேசியதாக வாட்ஸப்பில் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற பேச்சு அரசு ஊழியர்களிடம் கடுமையான அதிருப்தியும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. எந்த முதல்வரும் பேசாத வார்த்தைகளை இந்த முதல்வர் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  அதுமட்டுமில்லாது ஜாக்டோ- ஜியோ சார்பில் முதல்வரின் பேச்சை கண்டித்து வரும் 9ம் தேதி தமிழகம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். சுப்பிரமனியன்

ALSO READ:  செங்கோட்டை: காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா!

author avatar
ஆனந்தகுமார்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week