முன்னாள் முதல்வர் காமராஜர் மறைந்தபோது அவருக்கு மெரீனாவில் இடம் அளிக்குமாறு அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலரும், தமிழர் தேசிய முன்னணித் தலைவருமான பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கை சத்தியமூர்த்தி பவனில் நடத்தத் திட்டமிடப்பட்டது.
அவரை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய அப்போதைய முதல்வர் கருணாநிதி இடம் தர மறுத்தார் என்று கூறுவது தவறு. மாறாக, காமராஜரின் இறுதிச் சடங்குக்கு காந்தி மண்டபத்தில் அரசு நிலத்தை அளித்து அந்த இடத்தில் இறுதிச் சடங்கை நடத்துமாறு கருணாநிதிதான் கூறினார்.
அதன்படி காந்தி மண்டப நிலத்தில் காமராஜரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, அந்த இடத்தில் நினைவிடமும் அமைக்கப்பட்டது.