சதுரகிரியில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிப்பு!

சதுரகிரியில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயில் மலைப்பகுதிக்கு ஆடி அமாவாசை என்பதால், பக்தர்கள் அதிகளவில் வந்துள்ளனர். இன்றும் அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், சிறப்பு அதிரடிப்படையினர் சதுரகிரி மலைப் பகுதியில் குவிக்கப் பட்டுள்ளனர்.

சதரகிரி மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலாம் என்று வந்த தகவலை அடுத்து மாவோயிஸ்டுகள் ஊடுருவலைத் தடுக்க முதன்முறையாக சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சதுரகிரி மலைக்கு ஏறும் பக்தர்களும் கூட தீவிர சோதனைக்கு பின்னரே மலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.