வேலூர்: தமிழகத்தில் திமுக,. அதிமுக., இரண்டும் கூட்டணியில் உள்ளன என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார் டிடிவி தினகரன்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன். அப்போது அவர், தமிழக அரசு அணைகளின் பராமரிப்பு கேள்வி குறியாகி உள்ளது. முதல்வர் பழனிச்சாமி என்ன செய்து கொண்டிருந்தார்? தமிழ் நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், டெல்டா பகுதிகளில் தூர் வார ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாய் ஆற்றில் போய் விட்டதா ? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழ் நாட்டில் திமுகவும் அதிமுகவும் தான் கூட்டணி அமைத்துள்ளன என்று குற்றம் சாட்டினார்.
கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியை அரசியல் பார்க்காமல் மத்திய அரசு வழங்க வேண்டும்… என்று கூறினார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்.