திமுக., அதிமுக., கூட்டணி: தினகரன் பகீர்

Published:

ttv dinakaran - 2026

வேலூர்: தமிழகத்தில் திமுக,. அதிமுக., இரண்டும் கூட்டணியில் உள்ளன என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார் டிடிவி தினகரன்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன். அப்போது அவர், தமிழக அரசு அணைகளின் பராமரிப்பு கேள்வி குறியாகி உள்ளது. முதல்வர் பழனிச்சாமி என்ன செய்து கொண்டிருந்தார்? தமிழ் நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும்,  டெல்டா பகுதிகளில் தூர் வார ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாய் ஆற்றில் போய் விட்டதா ?  என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழ் நாட்டில் திமுகவும் அதிமுகவும் தான் கூட்டணி அமைத்துள்ளன என்று குற்றம் சாட்டினார்.

கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியை அரசியல் பார்க்காமல் மத்திய அரசு வழங்க வேண்டும்… என்று கூறினார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img