#கோலமாவு கோகிலா – நாயகி ஒரு கேங்க் தலைவரிடம் மாட்டிக்கொள்கிறார். அவர் நாயகியை ரேப் செய்ய முயலுகிறார். அங்கு க்ளோஸ் அப் ஷாட்டில் விஷ்ணுவின் தசாவதார புகைப்படம் வலிந்து திணித்துக் காட்டப்படுகிறது.
வில்லன்கள் போதைப்பொருள் கடத்தும் அறை முழுக்க சிவன் உள்ளிட்ட படங்களாகக் காட்சியளிக்கின்றன.
அவர்கள் வழக்கமாக போதைப்பொருள் டீல் பேசும் உணவக சுவர் முழுக்க சிவன் உள்ளிட்ட சாமி படங்கள்.
நாயகியின் குடும்பம் போதைப்பொருள் கடத்த ஆரம்பிக்கும்போது பக்தியுடன் முருகனை தீபாராதனைகளை காட்டி வழிபட்டு ஆரம்பிக்கிறார்கள்.
போனில் வாட்ஸ் அப்பில் இந்த மேசேஜை பார்வர்டு செய்தால் நன்மை நடக்கும் என காமெடியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த புகைப்படம் சாய் பாபா புகைப்படம்.
நாயகி கடைசியில் கொள்ளையடித்துவிட்டு அனைவரிடமுமிருந்து வண்டியுடன் தப்பிப்பதுபோல காட்சிவருகிறது. இடப்பக்கம் சம்பந்தமில்லாமல் பாதி ஸ்க்ரீனில் ‘சிவ சிவ’ என எழுதப்பட்ட பெரிய சிவ லிங்க பேனர் காட்டப்பட்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் நாயகி அவரது குடும்பம் உட்பட வில்லனிடம் அறைக்குள் மாட்டிக்கொள்கிறார். ரேப் செய்யப்படப் போகிறார். அவர் தப்பித்துவிட வேண்டும் என ஆடியன்ஸ்களும்கூட நினைக்கின்றனர். திரையில் யோகிபாபுவும் அதையே நினைக்கிறார். நினைக்கிற அவர், இம்முறை “கர்த்தரே காப்பாற்று” என்கிறார். பிறகு “மாதாவே காப்பாற்று” என சொல்கிறார். நாயகியும் காப்பாற்றப்படுகிறார்.
(பொதுநலன் கருதி இன்னும் சில காட்சிகள் விவரிக்கப்படுவதிலிருந்து தவிர்க்கப்படுகிறது. சமூகத்தை சீரழிக்கும் கதை எழுதி, பலர் வாழ்க்கை தடம் மாற வழி சொல்லிக் கொடுக்கும் ஒரு சமூக விரோதி இயக்கிய கிறிஸ்துவ பிரசாரப் படத்தை காசு கொடுத்துப் பார்த்து கல்லா கட்ட வைப்பதென்னவோ சூடு சொரணையற்ற ஹிந்துக்களே!)
இத்தனை காட்சிகளும் பார்த்த பின்னர் கடைசியில் இயக்குனரின் பெயர் திரையில் காட்டப்படுகிறது… பெயர் ‘நெல்சன்‘.