
அஜித், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள விசுவாசம் படத்தின் முக்கிய கேரக்டரில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் தற்போது நடிகர் ஆர்.கே.சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் சிவாவுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியானதில் இருந்தே இந்த தகவல் உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கின்றாரா? அல்லது ஹீரோவுக்கு உதவும் கேரக்டரில் நடிக்கின்றாரா? என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.



