திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள சிவன்மலையில் ஆண்டவர் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது,சில பக்த்தர்கள் கனவில் ஆண்டவன் சுட்சுமமாக சில பொருளை அவரின் உத்தரவின் மூலன் வைக்க சொல்லி அதன் மூலமாக சில செய்திகளை ஆசீர்வதிக்கிறார்
அது சில நலம் பயக்கும் காரியமாக அமையும் சில சமயம் அசாராதாமான சில நிகழ்வுக்கும் எச்சரிக்கையாக இருக்கும் படி அருளுகிறார்
மஞ்சள் பருத்தி போன்ற பொருள் வைக்க பட்ட போது அவை விலைவாசி உயர்ந்தது தண்ணீர் வைத்த போது ஆழிப்பேரலை (சுனாமியால் ) மிகப்பெரிய பாதிப்பு கணக்கு புத்தகம் வைக்கப்பட்ட போது வருமான வரி சோதனை போன்ற நிகழ்வு இது போன்று பல ஆண்டவரின் உத்தரவு இந்த முறை அருகம்புல் கீழாநெல்லி வேர் மற்றும் மிளகு உத்தரவு பொருளாக வைக்கபட்டுள்ளது
ஆதலால் மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் மஞ்சள் காமாலை வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படாமல் இருக்க, மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் முறையாக மருந்து உட்கொள்ளல், மற்றும் வெயில்லின் தாக்கதினால் இன்னும் சில நோய் நொடிகள் வராமல் இருக்க மேலும் விஷ கடிகள் இல்லாமலும் மக்கள் கவனமாக தங்களை எச்சரிக்கையுடன் இருக்க எல்லாம் வல்ல முருக பெருமானின் ஆசிகளே முறையாக இயற்கை வைத்திய முறையை பயன்படுத்தி மக்கள் அனைவரும் நலம் அந்த வைத்தீஸ்வரன் நம்மை காக்கட்டும்




