
விஜய் நடித்த தெறி, மெர்சல் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, மீண்டும் இப்போதைக்கு விஜய் படத்தை இயக்க வாய்ப்பில்லை என்று கோலிவுட்டில் கூறப்பட்டது.
இந்த நிலையில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தை அட்லி, தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், இந்த படத்தில் விஜய் நடித்த கேரக்டரில் ரவிதேஜா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த படத்தில் சமந்தா நடித்த கேரக்டரில் கேத்ரின் தெரஸாவும், எமிஜாக்சன் நடித்த கேரக்டரில் இன்னொரு முன்னணி நடிகையும் நடிக்கவுள்ளனர். இப்படம் பற்றி முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகவுள்ளது.



