கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான் அனுஷ்கா சர்மாவின் ‘பரி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
கடந்த மார்ச் 2ம் தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘பரி’ என்ற பேய் கலந்த ஹாரர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ப்ரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா, பரம்ப்ரதா சாட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதாபாரி சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் தமிழுக்கு ஏற்றவாறு ஒருசில மாற்றங்கள் செய்து ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அனுஷ்காஷர்மா நடித்த கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது



