நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் எம்.ராஜேஷ் கூறியபோது, ‘ ’விக்னேஷ் சிவன் தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை பண்ற மாதிரி இருந்துச்சு. அவர் ஸ்கிரிப்ட் வொர்க் பண்ண நேரம் கேட்டு இருக்கார். அவர் சிவாவுக்குதான் ஸ்கிர்ப்ட் எழுதிட்டு இருக்கிறார். அடுத்து அவர் சிவாவுக்கு படம் பண்ணுவார் என்று நினைக்கிறேன். என் ஸ்கிரிப்ட் ரெடியா இருந்ததுனால, நான் முதல்ல படம் பண்ண வேண்டியதாகிடுச்சு’ என்று கூறினார்.
விக்னேஷ் சிவன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. காமெடி மற்றும் சமூக கருத்து ஆகியவை இணைந்து இந்த படத்தில் தரவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
சிவகாரà¯à®¤à¯à®¤à®¿à®•ேயன௠காடà¯à®Ÿà®¿à®²à¯ மழை. மகிழà¯à®šà¯à®šà®¿.