December 5, 2025, 2:50 PM
26.9 C
Chennai

ஒரே நாடு… ஒரே கலாசாரம்… ஒரே உண்மை!

kanyakumari - 2025

”கோவிலில் தொழும் முறையில் வடநாட்டவர்களும் தென்னாட்டவர்களும் ஒரே முறையைப் பின்பற்றுவதில்லை. அப்புறம் எப்படி இந்து மதம் இந்த நாடு முழுதுக்கும் உள்ளதுன்னு சொல்றீங்க?” நடராஜன் சமீபத்தில் வலவன் வாசித்ததினால், அதில் வரும் ‘ அம்ம ’ கதை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

“ அடியோடும் சாஸ்திரம், எல்லா இடங்களிலும் சமூக ஒழுங்குமுறையைப் பண்படுத்தியது. சோதிக்கப்பட்டு, தேவையானவை சீர்செய்து எடுக்கப்பட்டபோது, பொருந்தாதவைகளைக் காலம் விலக்கியது. இது வளர்சிதை மாற்றத்தின்பின் வந்த செழுமை. பழக்கங்கள் , இடத்துக்கேற்ப மாறும். அதைப் பெரிதாக எடுக்க வேண்டியதில்லை.”

”சமஸ்க்ருத வாழ்க்கை முறையில் உள்ள தொழும் முறைக்கும், நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே சுதாகர்?

தேவிக்கு ஒரு சந்நதி, அதுக்கு அப்புற்ம்தான் பெருமாள் கிட்ட போகணும்னு ஒரு விதி நமக்கு. அவங்க அப்படியெல்லாம் ஒண்ணுமே சொல்றதில்ல. நேரா முன்னாடி போய் கையை விரிச்சு நிப்பாங்க. ஒரு வரிசை கிடையாது. அமைதியா நிக்கவோ உக்காரவோ மாட்டோம். ஒரே கசமுசா…Chaotic நம்ம கோவில்”

“வீட்டுல அப்பா அம்மா முன்னாடி வரிசையாக உக்கார்ந்தா பேசறீங்க? அது மிலிடரி வீடு, நடராஜன். நாம தொழும் முறை வேறு பிற மதங்கள் தொழும் முறை வேறு. உணர்வு முக்க்யம் இங்கு. நமக்கு இன்னும் தனிமனித ஒழுங்கு வேணும்- ஒத்துக்கறேன்.”

“பழைய சமஸ்க்ருத புஸ்தகத்த்துல நம்ம வழக்கம் ஒன்னு காட்டுங்க பாக்கலாம்” என்றார் நடராஜன்.

“எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. யார்கிட்டயாவது கேட்டுப் பாக்கறேன்” என்று சொல்லி வந்துவிட்டேன். குடைந்து கொண்டே இருந்தது. சிலநாட்களில் மறந்தும் போனேன்.

நேற்று , மிகுதியான போக்குவரத்து நெரிசலில் மாட்டி ( 12 கிமீ 2 மணி நேரம் ) முழி பிதுங்கும்போது, காரின் சி.டி ப்ளேயரில் வேளுக்குடி க்ருஷ்ணனின் புருஷ சூக்த விளக்கத்தைக் கேட்கத் தொடங்கினேன்.

“இந்த சூக்தம் மிகப் பழமையானது. வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. சூக்தங்களில் சிறந்தது புருஷ சூக்தம் “ கேட்டுக்கொண்டே வந்தேன். முன்னாடி இருக்கும் அல்ட்டிஸ் கார் மிக மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. க்ளட்ச் அழுத்தி அழுத்தி, கால் விண்ணெனத் தெறித்துக் கொண்டிருந்தது.
சி.டி சுழன்றுகொண்டிருந்தது.

“ இந்த சூக்தத்துல ஒரு இடத்துல கூட “எனக்கு இதைக் கொடு, அதைக்கொடுன்னு “ ஒரு வார்த்தை வராது. கடைசியில “ லக்‌ஷ்மீயுடன் இரவும் பகலும் போல் சேர்ந்தவனே! எனக்கு பிரியமானதைக் கொடு, நல்லது கொடு, அனைத்தையும் கொடு” என்கிறது.

”ஸ்ரீயத்தே லக்‌ஷீஸ்ச்ச பதன்யொள அஹோ ராத்ரி பார்ஸ்வே…..
இஷ்டம் மனிஷான, அமும் மனிஷான, சர்வம் மனிஷான”

யார் இருக்கும்போது கேட்கிறது? லக்‌ஷ்மீ என்ற தாய் இருக்கும்போது மட்டும். அவளின்றித் தருவதற்கு அவனாலும் முடியாது. கருணை, கொடை, அன்பு , உணவு அனைத்தையும் தாயிடமே கேட்கிறோம். எனவேதான்…”

நடராஜனை அழைத்தேன். இது தாய் நாடு, சாரதா தேவியின் கஷ்மீரத்திலிருந்து கன்யாகுமரி நிற்கும் கடற்கரை வரை.. காமக்க்யா இருக்கும் அஸ்ஸாமிலிருந்து, ருக்மிணீ அருளும் துவாரகை வரை…

உண்மை ஒன்றே.. அம்ம..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories