nellai collector shilpa sathish2 - 2026

நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் மேற்கொண்ட செயல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தூத்துக்குடி கலவரத்துக்குப் பின்னர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றவர் ஷில்பா சதீஷ். இவர் மாவட்டத்தின் பல இடங்கலில் அடிக்கடி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு நிர்வாகப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். அண்மையில் தென்காசி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை, மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

nellai collector shilpa sathish1 - 2026

இந்நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூரில் 115அடி உயர நீர் தேக்கத் தொட்டி மீது ஏறி  ஆட்சியர் ஷில்பா சதீஷ் ஆய்வு செய்ததைக் கண்டு பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். அவர் ஏணிப்படிகளில் ஏறும் படமும், மேல்நிலை நீர்த் தொட்டியில் ஆய்வு செய்யும் படமும் இப்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending