விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சில அடிப்படைவாத முஸ்லிம்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில், வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.
முன்னதாக, விநாயக சதுர்த்தி கொண்டாடப் பட்ட சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலத்துக்காக, அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக இன்று காலை வரை பிறப்பிக்கப் பட்ட 144 தடை உத்தரவு, தொடர்ந்து எழுந்துள்ள பதற்றத்தால் 22ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
அதுவரை காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்றும், நகரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.