மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு பெறப்பட்ட பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக செய்தி சேனல் ஒன்று சர்ச்சை கிளப்பியது.
மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த ஜூன் 20ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
750 படுக்கை வசதி, 50 சிறப்பு மருத்துவப் பிரிவுகள், 100 சிறப்பு மருத்துவர்கள் என எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்பில் இருந்தது. 100 மருத்துவப் படிப்பு இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரி, 60 செவிலியர் இடங்கள் கொண்ட செவிலியர் கல்லூரி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இதற்காக, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டது. எய்ம்ஸ் வளாகத்திற்கான கட்டுமான பொறியாளர் குழுவும், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் தில்லியில் இருந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான விவரம், செலவினம், டெண்டர், ஈடுபடும் நிறுவனம் என்றெல்லாம் வர்த்தக ரீதியாக தகவல் பெற விரும்பிய ஹக்கிம் காசிம் என்ற நபர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கேள்விகள் அனுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை, செலவினங்களுக்கான நிதி ஆணைய ஒப்புதல் குறித்த தகவல் வந்து சேராததால், நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டுமான டெண்டர் குறித்த தகவல்கள் எதுவும் எங்களிடம் இல்லை என்று பதிலளித்துள்ளது.
இதனிடையே மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம், மருத்துவக் கல்லூரி தொடர்பான வரைபடம் தயாரிக்கப் பட்டுள்ளதால், சரியான கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து தகவல் அளித்துள்ளார். மதுரையில் நிச்சயம் எய்ம்ஸ் அமையும் என்று கூறி , மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கானபூர்வாங்கப்பணிகள் அனைத்தும் படிப்படியாக துறைவாரியாக மத்திய மாநில அமைச்சகங்களில்அரசாங்க நடைமுறைப்படி செய்யப்பட்டுவரும் சூழலில் இந்த மிகப்பெரிய திட்டத்திற்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதுமே நிதிஒதுக்கி அரசாணை வரும் என்பது நடைமுறை – என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்தபின்னர் 60ஆண்டுகளில் வந்தது 9இடங்களில் மட்டுமே.ஆனால் கடந்த 4ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது.நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி- என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழக சுகாதாரத் துறைச் செயலரின் பதிலையும் குறிப்பிட்டுள்ளார்.
https://t.co/k4hqZkBow0 news on delay in proposed AIIMS hospital at madurai TN both centre& TN state govt are in the process of preparatory project report clearance at various departments as per govt norms in full swing before final central clearance @JPNadda efforts clarified
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) September 30, 2018
Nobody questioned RTI reply from @MoHFW_INDIA No-one lying on facts for delay which is a procedural norm followed in Govt for implementation of larger projects i am well aware of RTI reply 2Hakim from madurai.@PTTVOnlineNews quoted it right honb TN health minister clarified same https://t.co/GFMuapav1U
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) September 30, 2018