தனியார் பள்ளிகளை வருங்காலத்தில் அரசுப் பள்ளிகள் மிஞ்சும் என்று கூறினார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்ட்டையன்!
நடப்பு கல்வி ஆண்டிற்கான 11ம் வகுப்பு மாணவ / மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,தென் சென்னை நாடளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தனன் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவி ஆகியோர் சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியினை வழங்கினார்கள்.
ரோபோட்டிக் பயிற்சியின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல், இந்தியாவிலே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு இலவச ரோபோட்டிக் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு பள்ளியிலும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெரும் மாணவர்களே செய்த மூன்று அடி உயரமுள்ள ரோபோ மற்றும் 6 அடி உயரமுள்ள பெண் வடிவிலான ரோபோ, சிறிய அளவிலான டிரான் உள்ளிட்டவற்றை அமைச்சர் முன்னிலையில் மாணவர்கள் இயக்கி காட்டினர்.
அரசு பள்ளியில் நிகழ்ச்சியில் ரோபோக்கள் பயன்படுத்துவது இதுவே முதல்முறையாகும். ரோபோக்கள் தயார் செய்த மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டுகளை தெரிவித்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, அடுத்த கல்வி ஆண்டு முதல் தனியாருக்கு நிகரான சீருடைகள் தமிழக அரசால் 1-5 வரை 6-8 வரை வழங்கப்படும், அதனை தமிழக அரசே வழங்கும்! ஜனவரி முதல் வாரத்திற்குள் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்! அதுமட்டுமில்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் ”டேப்” வழங்குவதற்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம், விரைவில் அந்த திட்டமும் நடைமுறைப்படுத்த படும்.
இந்தியாவை பார்த்து மற்ற நாடுகள் பொறாமைப்படும் அளவிற்கு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு நல்கும் விதத்தில் கல்வி கொடுக்கப்படும். மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் 40% மதிப்பெண்களை பெரும் அளவிற்கு பாடத்திட்டத்தில் கல்விமுறை கொண்டுவரப்படும், இதனால் மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் மத்திய அரசு தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்
தமிழகத்தில் 672 இடங்களில் 60 லட்சம் ரூபாய் செலவில் அட்டல் டிங்கரிங்க் லேப் அமைக்கப்படும்! மாணவர்களில் நிலைமை மற்றும் தரத்தை அவர்கள் பயிலும் கல்வியை பொறுத்தே உள்ளது, ஒரு மாணவரின் தரத்தை நிர்ணயிப்பது அவர்களின் கல்வி மட்டுமே! – என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதியானது ஒரு வார காலத்திற்குள் அறிவிக்கப்படும்! அட்டல் டிங்கர் லேப் மூலம் , அரசு பள்ளி மாணவர்கள் ஆளில்லா விமானம் மற்றும் ரோபோ போன்றவற்றை உருவாக்க உதவியாக உள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 672 பள்ளிகளும், அடுத்த ஆண்டில் 1000 பள்ளிகளில் அட்டல் டிங்கரிங் லேப் வசதி அமைத்து தரப்படும்!
இடைவெளை நேரங்களில் டேப் மூலம் கல்வியை கற்பதற்கும், ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளவும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ/மாணவிகளுக்கு டேப் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
தமிழகத்தில் இடைநிற்றல் கல்வியானது 0.80% தான் உள்ளது, கடந்த காலங்களை விட இடைநிற்றல் கல்வியானது குறைந்து விட்டது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு இன்னும் ஒரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தப்படும்.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதியானது ஒரு வார காலத்திற்குள் அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்!