chiled marrag 1 - 2026

தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் வரைவு அறிக்கை இறுதி செய்யும் பணிகளை தொடங்க சமூநலத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுவாக திருமணத்திற்கான வயது ஆண்களுக்கு 21 வயதாகவும், பெண்களுக்கு 18 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வயதிற்கு முன்பாக திருமணங்கள் நடத்தி வைப்பது குழந்தை திருமணமாக கருதப்பட்டு வருகிறது.

மேலும் குழந்தை திருமணங்களை தடுக்க சைல்டு ஹெல்ப் லையன் எண் 1098 என்ற எண்ணுக்கு போன் செய்து புகார் கொடுக்கலாம்.

chiled marrag 2 - 2026

குழந்தை திருமணங்களை தடுக்கும் நடவடிக்கையாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆய்வுகள் நடத்தி வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கையில் குழந்தை திருமணம் நடைபெறுவதற்கான காரணங்கள், அவற்றை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், அரசு துறைகளின் பங்களிப்பு உள்பட பல்வேறு விபரங்கள் அடங்கியுள்ளன.

இந்த வரைவு அறிக்கையை அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பி வைத்து அவா்களுடைய கருத்துக்களையும் கேட்டறிய சமூகநலத் துறை திட்டமிட்டுள்ளது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

இது தொடர்பாக சமூகநலத் துறை தெரிவிக்கையில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வரைவு அறிக்கை தயார் நிலையில் உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன் இந்த மாத இறுதியில் வரைவு அறிக்கையை இறுதி செய்வதற்கான பணிகள் துவங்கப்படும்

அதன்படி அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பி வைத்து அவா்களுடைய கருத்துக்களையும் கேட்டறிந்து வரைவு அறிக்கையுடன் சோ்த்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதனை தொடர்ந்து தமிழக அரசு பரிசீலித்து இதனடிப்படையில் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான புதிய கொள்கை முடிவு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending