RUBA - 2026கேரளாவில் தமிழ்நாடு நெல்லையை சேர்ந்தவரிடம் விற்காமல் இருந்த லாட்டரி சீட்டில் ரூ.5 கோடி பரிசு கிடைத்த சம்பவம் இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கோட்டைக்கருங்குளம் கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (வயது 50).

இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு குடும்ப வறுமையயை முன்னட்டு பிழைப்பு தேடி தனது மனைவி சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மூவாற்றுப்புழா என்ற அங்கு அவருக்கு சரியான வேலை ஏதும் கிடைக்காமல் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்து வந்துள்ளார் இந்நிலையில் நண்பர் ஒருவா் மூலம்

லாட்டரி விற்கும் வேலைக்கு சேர்ந்தார் அங்கு மொத்த வியாபாரிகளிடம் லாட்டரிகளை வாங்கி வந்து தெரு, தெருவாக கால்நடைகயாக சென்று பொதுமக்களிடம் லாட்டரிகளை விற்பனை செய்து வந்தார். இதன் மூலம் தனது குடும்ப வறுமை ஓரளவுக்கு தீா்ந்து வந்துள்ளது. ஆனால் அவா் நினைத்தபடி பிள்ளகைள் நல்லமுறையில் படிக்க வைக்க முடியவில்லை இதனால் மிகவும் நொந்துபோய் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கேரள அரசு வெளியிட்ட காருண்யா பாக்கியஸ்ரீ பம்பர் லாட்டரி சீட்டுகளையும் வாங்கி விற்று வந்தார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

குலுக்கலுக்கு முதல் நாள் 4 லாட்டரி சீட்டுகள் மட்டும் விற்பனையாகவில்லை. அவரும் பலரிடமும் லாட்டரி சீட்டை வாங்கிக் கொள்ளும் படி கெஞ்சிக் கேட்டும் யாரும் வாங்கவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த செல்லையா அந்த லாட்டரிச் சீட்டுகளுடன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மறுநாள் லாட்டரி முடிவுகள் வெளியானபோது தான் விற்ற லாட்டரிச்சீட்டிற்கு பரிசுகள் ஏதும் விழுந்து உள்ளதா என்று அவர் பார்த்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரிடம் விற்காமல் இருந்த ஒரு லாட்டரிச்சீட்டிற்கு முதல் பரிசான ரூ.5 கோடி கிடைத்திருந்தது தெரிய வந்தது.

உடனே தான் வாங்கிய லாட்டரி மொத்த வியாபாரியிடம் சென்று தனக்கு பரிசு விழுந்தததை செல்லையா உறுதி செய்துகொண்டார்.

ரூ.5 கோடி பரிசு பெற்றது குறித்து லாட்டாி வியாபாரி  செல்லையா கூறியதாவது:-

லாட்டரிச்சீட்டுகளை விற்று ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்த என்னால் எனது குடும்பத்தினரை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியவில்லை. பிள்ளைகளையும் சரியாக படிக்க வைக்க முடியவில்லை.

லாட்டரி பரிசு மூலம் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பேன். சொந்த ஊரில் வீடு கட்டுவேன்.
என ஆனந்த கண்ணீர் விட்டபடி கூறினார் இதனால் அவரது குடும்பத்தினா் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending