Screenshot_2021-02-08-07-09-13-57

குளித்தலை அருகே ரேக்ளா ரேஸ் சீறிப்பாய்ந்த குதிரைகள் …. ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கோட்டமேடு பகுதியில் 7 ஆம் ஆண்டு எல்கை பந்தயம் நடந்தது. இதில் குளித்தலை மற்றும் கரூர் பிற மாவட்டங்களிலிருந்தும் சுமார் 70க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்ட ரேக்ளா ரேஸ் நடந்தது.

இதில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரைகள் என மூன்று ரகமாக பிரிக்கப்பட்டு ரேஸ் விடப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சுமார் 8 முதல் 16 கி.மீட்டர் வரை பந்தய எல்லையாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

முதலில் வெற்றிபெற்ற 3 குதிரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதேபோல் சிறிய ஒத்தை மாடு, பெரிய ஒத்தை மாடு, இரட்டை மாடு என மூன்று ரகமாக போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த பந்தயத்தினை காண குளித்தைலை மட்டுமில்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடு மற்றும் குதிரை பந்தய பிரியர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending