சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் ஒரே நேரத்தில் லட்சகணக்கானவர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசலில் சிக்கி 710க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 பேர் மற்றும் காயமடைந்த 13 பேர் இந்தியர்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்து உயிரிழந்தவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு ள்ளது.
உயிரிழந்த 14 பேர் ரின் பட்டியலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர்.. அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில், இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களுக்காக, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த துயர சம்பவத்திற்கு, பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.