panrutti padaiveettamman merry - 2026

பண்ருட்டி: மாரியம்மனுக்கு மேரியம்மா அலங்காரம் செய்யப் பட்டதால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலையை ஆரோக்கியமாதா உருவத்தில் அலங்காரம் செய்துதுள்ளனர். இதனால் ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த பலர் இதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை சேர்ந்த அடிகளார் இதேபோன்று மேல்மருவத்தூர் அம்மனுக்கு மேரி மாதா வடிவத்தில் அலங்காரம் செய்து அவரது கையில் குழந்தையாக இயேசு பொம்மையை வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அவரது சித்தர் பீடத்தைச் சேர்ந்த சிலர் இது போன்று அலங்காரம் செய்வது பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளது.

2 responses to “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அடிகளார் தொடங்கி வைத்தது; மற்ற கோயில்களிலும் தொடர்ந்ததால் இந்துக்கள் கடும் எதிர்ப்பு!”

  1. பங்காரு அடிகளார் போன்றவர்களை தூக்கி வைத்து கொண்டு கொண்டாடியவர்கள் இனி அதற்காக வருத்தப்படுவார்கள்.

  2. ஆன்மிக வழிகாட்டிகளைப்போல் செயல் படும் ஆன்மிக வியாபாரிகளை மக்கள் அடையாளம் கண்டு தெளிவடைய வேண்டும். இவர்களெல்லாம் நமது பண்பாட்டையும் ஆன்மிகக் கலாச்சாரத்தையும் கூண்டோடு அழிக்க வந்த புல்லுருவிகள். வேற்று மதத்தாரிடம் விலை போனவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending